ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் மழை பெய்யாததால் வன ஓடைகள், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தீவனம், குடிநீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், இன்று(ஏப்.18) காலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய மூன்று காட்டு யானைகள் பவானிசாகர் அணை அருகே புங்கார் பழத்தோட்டம் பகுதியில் முகாமிட்டு செடிகொடிகளை பறித்து உண்பதில் ஆர்வம் காட்டின. காலை, மாலை நேரங்களில் பவானிசாகர் அணை பகுதியில் காட்டு யானைகள் நடமாடுவதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோர் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க:
குழந்தையிடம் செயின் பறிப்பு: இளைஞர் கைது!