சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, செந்நாய், மான், காட்டெருமை, கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது குடிநீர் மற்றும் தீவனம் தேடி சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். பகல் மற்றும் இரவு நேரத்தில் சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் மித வேகத்தில் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
செல்ஃபி எடுக்க முயற்சி செய்தவரை ஓட ஓட துரத்திய யானை..! - Elephant
ஈரோடு: சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் நடமாடிய தாய் யானை உடன் செல்ஃபி எடுக்க முயன்றவரை துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் தாய் யானை ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அப்போது, அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் யானை அருகில் சென்று வாகனத்தை நிறுத்தி, புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளனர். இதனைக்கண்ட யானை ஆத்திரமடைந்து காரைத் துரத்தியுள்ளது. யானை துரத்தி வருவதைக்கண்டதும் காரில் வந்த வாகன ஓட்டிகள் அச்சம் அச்சமடைந்தனர்.
மேலும், குட்டியுடன் நடமாடிய யானை சாலையின் தேசிய நெடுஞ்சாலையை இரண்டு முறை குறுக்கும் நெடுக்குமாக கடந்து சென்று காரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து குட்டியுடன் யானை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதையடுத்து காரில் வந்தவர்கள் புறப்பட்டுச் சென்றனர். மேலும், இரவு நேரத்தில் சாலையோரம் நடமாடும் வனவிலங்குகளை தொந்தரவு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.