ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர்மாளம் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த அடர்ந்த வனப்பகுதியில் திண்டுக்கலில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். ஆசனூர் வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் அவ்வப்போது சாலையைக் கடந்து செல்வது வழக்கம்.
சாலையில் சுற்றித்திரியும் காட்டு யானையால் பொதுமக்கள் பீதி! - காட்டு யானை சாலையில் சுற்றித்திரிந்ததுள்ளது
ஈரோடு : திண்டுக்கல் - பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிந்ததால், பொதுமக்கள் சாலையைக் கடக்க முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.
சாலையில் சுற்றித்திரியும் காட்டு யானை
இந்நிலையில், ஆசனூர் அருகே ஒற்றை காட்டு யானை சாலையில் சுற்றித் திரிந்துள்ளது. மேலும், அங்குள்ள மரக்கிளைகளை உடைத்து உண்டதாகவும் தெரிகிறது. இதனால் வாகனங்களில் செல்லும் மக்கள் அச்சத்தில் சாலையை கடக்க முடியாமல் இருந்தனர். மேலும், சுமார் 30 நிமிடம் சாலையில் உலா வந்த யானை தானக வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க : காட்டு யானை தாக்கியதால் மூதாட்டி உயிரிழப்பு