ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்து வனப்பகுதியின் நடுவே திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்தச் சாலை தமிழ்நாடு-கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும்.
இந்த மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் பேருந்து, சரக்கு லாரி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் நாள்தோறும் சென்றுவருகின்றன. இந்நிலையில், இந்த மலைப்பாதையில் வரக்கூடிய அதிக பாரமுள்ள கரும்பு லாரிகள், மலையின் மேல் ஏறுவதற்கு சிரமப்பட்டு கரும்புகளை அங்கேயே வீசி செல்கின்றனர்.
சாலையில் திரியும் யானைகள் இதனையறிந்த காட்டு யானைகள் கரும்புகளைத் தேடி சாலைக்கு வருகிறது. இன்று காலை சாலையின் அருகே மூன்று யானைகள் கருபுகளைத் தேடிவந்து முகாமிட்டுள்ளது. மேலும், சாலையில் செல்லும் வாகனங்களை பார்த்தபடியே யானைகள் சாலையில் நின்றுள்ளது.
இதனால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் வாகன ஓட்டிகள், யானைகளின் அருகே வாகனத்தை நிறுத்த வேண்டாம், கவனத்துடன் வாகனத்தில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: சாலையில் நடந்துசென்ற யானைகளால் வாகன நெரிசல்