தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெடுஞ்சாலையில் வட்டமடித்த ஒற்றை யானை: வழிவிடுமா காத்திருந்த வாகன ஓட்டிகள்! - Satyamangalam Mysore National Highway

ஈரோடு: ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், ஒற்றை யானை நீண்ட நேரம் நின்றதால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகினர்.

elephant
ஒற்றை யானை

By

Published : Apr 25, 2021, 7:24 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்துவருகின்றன. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சாலையோரம் முகாமிட்டுவருகின்றன.

நெடுஞ்சாலையில் வட்டமடித்த ஒற்றை யானை

அந்த வகையில், ஆசனூர் மலைப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, சத்தியமங்கலம் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், நீண்ட நேரம் நின்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.

அவ்வழியே வரும் வாகனங்களை யானை வழிமறித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு: அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்!

ABOUT THE AUTHOR

...view details