தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் சுற்றித்திரியும் யானையால் வாகன ஓட்டிகள் பீதி! - sathyamakalam elephant

ஈரோடு: சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரத்தில் ஒற்றை ஆண்யானை நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

சாலையில் சுற்றித்திரியும் யானை

By

Published : Aug 30, 2019, 10:49 AM IST

Updated : Aug 30, 2019, 12:27 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பகல் நேரங்களிலேயே சாலைகளில் நடமாடுவது வாடிக்கையாகியுள்ளது.

சாலையில் சுற்றித்திரியும் யானை

இந்நிலையில், இன்று காலை சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை ஆண் யானை ஒன்று சுற்றித்திரிந்தது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். மேலும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பயணிகள் உள்ளிட்டோர் யானையை புகைப்படம் எடுப்பதற்காக சாலையில் இறங்கி நிற்கின்றனர்.

இதனை அறிந்த ஆசனூர் வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாகனங்களை மிக கவனமாக இயக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினர். மேலும், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதபடி கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Last Updated : Aug 30, 2019, 12:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details