தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சோதனைச் சாவடியை கம்பீரமாக கடந்த யானை - சத்தியமங்கலம் வனப்பகுதி

'எனக்கே செக் போஸ்டா' என கேட்பது போல யானை ஒன்று சோதனைச் சாவடியை கடக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

யானை
யானை

By

Published : Dec 10, 2021, 9:36 AM IST

ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்த கேர்மாளம் வனப்பகுதியில் சிறுத்தை, யானைகள், புலிகள் சாலையை அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி யானை, சிறுத்தை நடமாடும் பகுதியில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்றிரவு (டிசம்பர் 9) வனப்பகுதியிலிருந்து வந்த ஆண் யானை ஒன்று கேர்மாளம் சோதனைச்சாவடி வழியாக கம்பீரமாக நடந்து சென்றது.

சோதனை சாவடியை கம்பீரமாக கடந்த யானை

சோதனைச்சாவடியில் இருந்த ஊழியர்களை பார்த்து "நாங்க நடக்கிற வழியில் சோதனைச் சாவடியா" என கேட்பது போல யானை அவர்களை பார்த்தபடி கம்பீரமாக சென்றுள்ளது. அங்கிருந்த ஊழியர்கள் போ, போ என உரிமையாக செல்லும் படக்காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது.

இதையும் படிங்க:தென் ஆப்ரிக்காவில் சுற்றுலா பயணிகளை தாக்கும் யானை..!

ABOUT THE AUTHOR

...view details