சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் சில நாட்களாக காலில் ஏற்பட்ட காயத்துடன் 25 வயதுள்ள ஆண் யானை சுற்றித் திரிந்தது. காலில் வீக்கம் அதிகமாக இருந்ததால் நடக்க முடியாமல் தவித்துவந்த அந்த யானை, நேற்று வெளுமுககுட்டை என்ற இடத்தில் நடக்கமுடியாமல் படுத்தது.
யானைகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஆண் யானை உயிரிழப்பு! - ஆண்யானை உயிரிழப்பு
ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் காலில் காயத்துடன் உயிருக்குப் போராடி வந்த 25 வயதுள்ள ஆண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
ஆண்யானை உயிரிழப்பு
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான மருத்துவக்குழுவினர்,யானைக்கு குளுகோஸ், திரவ உணவுகள் வழங்கி முதலுதவிகளை மேற்கொண்டனர். இதற்கிடையே, யானையை எழுந்து நிற்க வைப்பதற்காக ஜேசிபி இயந்திரம் கொண்டுவருவதற்கு வனத்துறையினர் முயற்சித்தனர். ஆனால், அதற்குள் யானையின் உயிர் பிரிந்துவிட்டது.மேலும், இச்சம்பவத்திற்கு யானைகள் இடையே ஏற்பட்ட மோதல் தான் காரணம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.