நீலகிரி மாவட்டம் கூடலூர் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுக்கு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புத்துணர்வு முகாம் இந்தாண்டு மிகவும் தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டது.
பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தொடங்கி 24 யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த யானைகளுக்கு காலை மாலை ஊட்டச்சத்துமிக்க பழ வகைகள் மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டுவந்தன.
48 நாட்கள் பராமரிக்கப்பட்டு வந்த இந்த வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் இன்று நிறைவு பெற்றது. இந்த புத்துணர்வு முகாம் நிறைவு நிகழ்ச்சிக்கு முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் சண்முகப்பிரியா தலைமை தாங்கினார். தற்சமயம் பள்ளிகளுக்கு தேர்வு நடைபெறுவதால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் குறைவாகவே வந்துள்ளனர்.
நாளை முதல் புலிகள் காப்பகத்தில் உள்ள 24 யானைகளுக்கும் இனி வழக்கம்போல் உணவு வழங்கப்படும் என வன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம்