அந்தியூர் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கோடைகாலம் என்பதால் வனப்பகுதிகளில் விலங்குகளுக்கு போதிய உணவு, தண்ணீர் கிடைக்காததால், குடியிறுப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இந்நிலையில், அந்தியூர் வனப்பகுதிகளில் இருந்து நான்கு காட்டு யானைகள் வெளியேறி, விராலிக்காட்டூர் பகுதியில் உள்ள மரவள்ளிக்கிழங்குகளை சேதப்படுத்தின. பின்னர் அங்கிருந்து மற்றொரு தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் வாழை, மக்காசோளப் பயிர்களை நாசம் செய்தன.
தோட்டத்துக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்! - ஈரோடு
ஈரோடு: அந்தியூர் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய நான்கு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விவசாய தோட்டங்கள் மற்றும் பயிர்களை நாசம் செய்தது.

இதனையடுத்து, அட்டகாசம் செய்த நான்கு யானைகளைத் தீப்பந்தம் காட்டி விவசாயிகள் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், `அந்தியூர் வனப்பகுதியில் வன விலங்குகளுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் யானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. யானைகள் மற்றும் வன விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகாமல் இருப்பதற்கு அகழி அமைப்பதோடு, மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பயிர்களை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்' என்றனர்.