தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆந்த்ராக்ஸ் நோய்க்கு பலியான 10 வயது குட்டி யானை! - குட்டி யானை

ஈரோடு: ஆந்த்ராக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது குட்டி யானை கல்லாம்பாளையம் வனப்பகுதியில் உயிரிழந்தது.

குட்டி யானை
குட்டி யானை

By

Published : Aug 12, 2021, 10:14 AM IST

Updated : Aug 12, 2021, 10:34 AM IST

ஈரோடு-நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தெங்குமரஹாடா வனப்பகுதியானது யானைகளின் முக்கிய வழித்தடமாக உள்ளது.

இங்கு மாயாற்றங்கரையோரம் வாழும் யானைக் கூட்டத்தைச் சேர்ந்த 10 வயது மதிக்கத்தக்க பெண் குட்டி யானை ஒன்று, தெங்குமரஹாடா கல்லாம்பாளையம் வனத்தில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்று வனத்துறையினர் ஆய்வு செய்தபோது, குட்டி யானை ஆந்த்ராக்ஸ்நோய் அறிகுறிகளுடன் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இதனையடுத்து யானையின் உடலிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து ஆந்த்ராக்ஸ்நோயால் பாதிக்கப்பட்ட யானையின் உடலை வனத்துறையினர் பாதுகாப்புக் கவச உடைகள் அணிந்து அதே இடத்தில் எரியூட்டினர்.

ஆந்த்ராக்ஸ்நோய் பாதிப்பு காரணமாக தெங்குமராஹாடா வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் கிராம மக்களிடம் வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:பாறையில் வழுக்கி விழுந்து குட்டி யானை உயிரிழப்பு

Last Updated : Aug 12, 2021, 10:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details