தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

500-க்கும் மேற்பட்ட வாழை மரங்களைச் சேதப்படுத்திய ஒற்றை யானை! - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: பவானிசாகர் அருகே வாழைத் தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானை 500-க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வாழை மரங்கள்
வாழை மரங்கள்

By

Published : Sep 21, 2020, 7:14 PM IST

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள புதுபீர்கடவு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி (45). இவரது தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

இவர் தனது விவசாய தோட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட கதலி ரக வாழை மரங்கள் பயிரிட்டுள்ளார். தற்போது வாழைக் குலை தள்ளிய நிலையில் அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்தது.

இந்நிலையில் பவானிசாகர் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றையானை பழனிச்சாமி பயிரிட்டுள்ள வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்களைத் தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது. இதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் ஒற்றை யானையை விரட்ட முயன்றும் பலன் ஏற்படவில்லை.

தொடர்ந்து வாழை மரங்களைச் சேதப்படுத்திய ஒற்றை யானை மீண்டும் பழனிச்சாமி தோட்டத்தில் புகுந்து வாழைகளைச் சேதப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது. பிறகு இது குறித்து பவானிசாகர் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தும், குறித்த நேரத்தில் வனத் துறையினர் வரவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யானையால் ரூ.1 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதாகவும், சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், வனப்பகுதியை விட்டு யானை வெளியே வராமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் இப்பகுதியில் விவசாயிகளை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details