ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. வனத்துக்குள் இருந்து வரும் யானைகள் விவசாய நிலங்களை அடிக்கடி சேதப்படுத்துவதால் அங்குள்ள விவசாயிகள் பாதுகாப்புக்காக மின்வேலி அமைத்து பாதுகாத்துவருகின்றனர்.
இந்நிலையில் கரளவாடியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் தோட்டத்தில் கரும்பு பயிரைச் சாப்பிடுவதற்காக வந்த ஆண், பெண் யானைகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தன.