ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியே கடம்பூரைச் சேர்ந்த 4 பேர் காரில் குன்றி மலைப்பகுதிக்கு சென்றனர். குன்றியில் இருந்து 10 கிமீ தூரத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஒற்றையானை காரைப் பார்த்தும் அதே இடத்தில் நின்றது.
யானை நகர்ந்த பின்னர் அப்பகுதி வழியாகச் செல்லலாம் என காரில் வந்தவர்கள் ஒதுங்கி வாகனத்தை இயக்காமல் காத்திருந்தனர். ஆனால், சிறிது நேரத்தில் அந்த யானை மெதுவாக நகர்ந்து முன்னோக்கி வந்தது.