தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனங்களை துரத்தும் யானைகள்! - Erode district news

ஈரோடு: ஆசனூர் வனச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்களை, பெண் யானைகள் துரத்துவதால் பயனிகள் பீதியடைந்துள்ளனர்.

பெண் யானை
பெண் யானை

By

Published : May 6, 2020, 11:36 AM IST

Updated : May 6, 2020, 12:19 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் உள்ள ஏராளமான யானைகள் அருகில் உள்ள குத்தியாலத்தூர் காட்டுப்பகுதிக்கு செல்ல சாலையை பயன்படுத்துகின்றன.

தமிழ்நாடு கர்நாடக இடையே செல்லும் வாகனங்கள், இந்தச் சாலையை பயன்படுத்துவதால் யானைகள், வாகனங்கள் செல்லும் வரை காத்திருந்து சாலையை கடந்தன. ஆனால் தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தால் காரணமாக 42 நாள்களாக அங்கு போக்குவரத்து பயணம் குறைந்து, தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடியது. இதனால் யானைகள் சாலையை காடு போல் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

இருசக்கர வாகனங்களை துரத்தும் யானைகள்

இந்நிலையில் தற்போது சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி வழியாக ஆசனூர் வனச்சாலையில் செல்லும் இருசக்கர் வாகனங்களை, பெண் யானை துரத்துவதால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:ஈரோட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடு திரும்பினர்!

Last Updated : May 6, 2020, 12:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details