சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் தற்போது தமிழ்நாடு - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள வனப்பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. அவ்வப்போது இந்த யானைகள் சாலையைக் கடக்கின்றன.
திம்பம் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானைக் கூட்டம்! - elephants blocked vehicles
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை யானைக் கூட்டம் வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் அருகே இரண்டு குட்டி யானைகளுடன் தாய் யானைகள் சாலையில் அங்கும் இங்கும் நடமாடின. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் சாலையில் அணிவகுத்து நின்றனர்.
யானைகள் வாகனங்கள் நிற்பதைக் கண்டுகொள்ளாமல் நடமாடியதால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். சுமார் 20 நிமிடங்கள் யானைகள் சாலையை விட்டு நகரவில்லை. பின்னர் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன. இதனால் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.