தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரம் தாக்கி இரண்டு மாடுகள் பலி! - இரண்டு மாடுகள் மின்சாரம் பாய்ந்து பலி

ஈரோடு : சத்தியமங்கலம், தாளவாடி அருகே விவசாயி தோட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில், அங்கே கட்டியிருந்த இரண்டு மாடுகள் பலியாகின.

மின்சாரம் தாக்கப்பட்டு மாடுகள் இறந்தது.

By

Published : Sep 9, 2019, 5:08 PM IST


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி பகுதியயைச் சேர்ந்தவர் அப்துல் பாசித். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் தென்னங்கீற்றால் கூரை அமைத்து நான்கு மாடுகளை பாரமரித்துவந்தார்.

மின்சாரம் தாக்கி இறந்த மாடுகள்.

இந்நிலையில், பலத்த காற்று வீசியால் அந்த விவசாயின் நிலத்தின் வழியாக செல்லும் மின்கம்பி அறுந்து அங்கு கட்டியிருந்த மாடுகளின் மீது விழுந்ததில், இரண்டு மாடுகளும் சம்பவ இடத்திலேயே பலியாகின.

இதுகுறித்து மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெவிக்கப்பட்டது. அங்கு வந்த அலுவலர்கள் மின்சார இணைப்பை துண்டித்து மாடுகளை மீட்டு ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தில் ரூ 50ஆயிரம் மதிப்புள்ள மாடுகள் உயிரிழந்துள்ளன எனவே அதற்கான இழப்பீடை வழங்க வேண்டும் என அப்துல் பாசித் கோரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details