சத்தியமங்கலம் பேருந்து நிலைய வளாகம் மற்றும் கோபி சாலையில் உள்ள வணிக வளாகக் கடைகளில் தங்களது கடை பெயர் குறித்த விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை இப்பகுதியில் பலத்த காற்று வீசியது. இந்தக் காற்று காரணமாக ஒரு கடையிலிருந்த விளம்பர போர்டு தட்டி பறந்துச் சென்று மின்கம்பியின் மீது விழுந்ததால் இப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
மின்கம்பியில் பறந்து விழுந்த விளம்பர பேனரால் 2 மணிநேரம் மின்தடை!
ஈரோடு: சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே பலத்த காற்று வீசியதால் பேனர் பறந்து மின்கம்பியில் சிக்கி இரண்டு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
Electricity problem in sathy
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், மின்கம்பியில் சிக்கிய பேனரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாலை 7 மணி வரை மின்தடை ஏற்பட்டது. கடைக்காரர்கள் தங்களது கடைகளின் பெயர் அடங்கிய விளம்பர போர்டுகளை காற்றில் பறக்காவண்ணம் பாதுகாப்பாக வைக்குமாறு சத்தியமங்கலம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது? - சுபஸ்ரீ உயிரிழப்பு விவகாரத்தில் கோபமான நீதிபதிகள்!