தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சார சட்டத் திருத்த மசோதா: தமிழ்நாடு பாதிக்கும் - முத்தரசன்

மின்சார சட்டத் திருத்த மசோதா அமல்படுத்தினால் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு தான் கடுமையாக பாதிக்கப்படும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

By

Published : Aug 11, 2022, 7:44 PM IST

முத்தரசன்
முத்தரசன்

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு தொண்டர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

முத்தரசன்

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "பாஜக கட்சி தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறாக பயன்படுத்தி மத்தியில் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் தாங்களே ஆள வேண்டும் என்ற ஜனநாயக விரோத போக்கை மேற்கொண்டு வருகிறது. வேறு கட்சிகள் ஆட்சி செய்த மாநிலங்களில் ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆடு, மாடுகளை விலைக்கு வாங்குவது போன்று மற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குகின்றனர். தங்கள் கட்சி மட்டுமே ஆளவேண்டும் என்ற முறையில் இதுவரை அவர்கள் மேற்கொண்ட வழிமுறை அம்பலமாகி உள்ளது.

பீகாரில் இன்று பாஜகவோடு தொடர்ந்து நெருங்கிய உறவில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் விலகி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இணைந்து நிதீஸ்குமார் ஆட்சி அமைத்துள்ளது இது தொடக்கம் தான். பாஜகவிற்கு நாட்டு மக்கள் நல்ல பாடத்தை விரைவில் கற்றுத்தருவர். அந்த கட்சியோடு உறவில் உள்ள மற்ற கட்சியினரும் விரைவில் உணருவர். முன்னாள் முதலமைச்சர் கலைஞர், பாஜக பற்றி குறிப்பிடும் போது பாஜக ஒரு ஆக்டோபஸ் என குறிப்பிடுவார். அது எவ்வளவு உண்மை என்பது அண்மை காலமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.

நாட்டை ஆளும் தகுதி பாஜகவிற்கு இல்லை. நாட்டை ஆளும் அளவிற்கு தகுதியான கட்சியாக பாஜக இல்லை. எந்த கட்சி வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். ஆனால் இந்தியா போற்றுகிற பின்பற்றுகிற மதச்சார்பின்மை கொள்கை தான் மிக மிக முக்கியம். ஆனால் பாஜவிற்கு இந்த மதச்சார்பின்மை என்ற கொள்கையில் உடன்பாடு இல்லை. காலம் காலமாக தியாகம் செய்து காக்கப்பட்ட கொள்கை தான் மதச்சார்பின்மை கொள்கை. அந்த கொள்கைக்கு நேர்மாறாக செயல்படுகிறது.

நான்கு வர்ண கொள்கையில், மனுதர்மத்தில் நம்பிக்கை உள்ள கட்சி தான் பாஜக புதியதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டுமான பணிக்காக பூஜை நடந்த போது, குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை. அவரை புறக்கணித்து விட்டு தான் பூஜை போடும் பணி நடைபெற்றது. காரணம் குடியரசுத் தலைவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் புறக்கணித்து விட்டனர். தாழ்த்தப்பட்டவர்களையும், பழங்குடியினரை குடியரசுத் தலைவர் ஆக்குகிறோம் என்பது எல்லாம் நடிப்பு.

அதிகாரத்திற்கு வந்து விட்ட காரணத்தால் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். ராணுவம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. மற்ற நாடுகளில் உள்ள ராணுவத்தை விட மிகுந்த கட்டுப்பாட்டோடு உள்ள நமது ராணுவத்தை ஆர் எஸ்.எஸ். ஆக்குகின்ற மிக மோசமான நிலைக்கு தள்ளவே, அக்னிபாத் என்ற திட்டத்தை கொண்டு வந்து உள்ளது. நாட்டை பாதுகாக்கும் ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் ஆக்கும் மிக மோசமான நடவடிக்கைக்காக தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு கடுமையாக ஏற்றம். விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து கொண்டே இருக்கிறது, உணவு பொருள்களுக்கு மட்டுமின்றி அனைத்து பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு என பலவகையில் விலை வாசி உயர்த்தப்பட்டு உள்ளது. மக்கள் வருவாய் அதிகரிக்கவில்லை. வாங்கும் சக்தி மக்களிடம் இல்லை. இந்த விலைவாசி உயர்வை எதிர்த்து மக்க போராட்டத்தில் ஈடுபட வெகுநாட்கள் ஆகாது.

விலைவாசி உயர்வை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட வெகு நாட்கள் ஆகாது. இலங்கையை போன்று இந்தியாவிலும் நடக்கும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி வரும் 30ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் விலைவாசி உயர்விற்கும், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்விற்கு எதிராக, தற்போது கொண்டு வந்துள்ள மின்சார சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும்.

மின்சார சட்டத் திருத்த மசோதா 2022 ஆம் ஆண்டு கடும் எதிர்ப்பை மீறியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஜெயலலிதா காலத்தில் இருந்தே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த திட்டத்தை அமல்படுத்தினால் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு தான் கடுமையாக பாதிக்கப்படும். காரணம் தமிழ்நாட்டில் விவசாயம் பிரதானமாக உள்ளது. பல உயிர்களை பலி கொடுத்து இலவச மின்சாரம் பெறப்பட்டு உள்ளது. லட்சக்கணக்கான விவசாயிகள் இலவச மின்சாரம் முலம் பயன்பெற்று வருகின்றனர்.

இதை கலைஞர் முதலமைச்சராக இருந்த போது அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் என்று அறிவித்தார். ஒன்றிய அரசின் சட்டத்தின் மூலமாக மின்சாரம் தனியார் துறைக்கு போய்விடும். அப்போது இலவச மின்சாரத்தை எதிர்பார்க்க முடியாது. தனியார் துறையினர் விருப்பம் போல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்று மின் கட்டணத்தை உயர்த்துவார்கள். முன் வைப்பு தொகை உயர்த்தப்படும்.

சிறு குறு தொழில்கள் முழுமையாக பாதிக்கப்படும். ஒரு போதும் இந்த மசோதாவை ஏற்க முடியாது. ஒரு திட்டத்திற்கு எதிர்ப்பு வரும்போது ஜனநாயக முறைப்படி அதை மதித்து முடிவெடுக்க வேண்டும். மோடி தலைமையிலான அரசு ஜனநாயக அரசு இல்லை" என்றார்.

இதையும் படிங்க:சேகர் ரெட்டிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவு ரத்து

ABOUT THE AUTHOR

...view details