தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எலெக்ட்ரிக்கல் கடை சுவர் இடிந்து விழுந்து மூவர் பலி: மூவர் படுகாயம் - ஈரோடு கிரைம் செய்திகள்

ஈரோடு: அந்தியூரில் எலெக்ட்ரிக்கல் கடை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மின்சாதன கடை சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு
மின்சாதன கடை சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு

By

Published : Jul 19, 2021, 5:45 PM IST

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் திங்கள்கிழமைதோறும் போடப்படும் வாரச் சந்தை கடந்த மூன்று மாத காலமாக கரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தொற்றுப் பரவல் குறைந்து வருவதால் மீண்டும் இன்று (ஜூலை.19) முதல் வாரச் சந்தை மீண்டும் தொடங்கியது.

இந்த வாரச் சந்தைக்கு பர்கூர் மலைப்பகுதியிலிருந்து தானியப் பயிர் விற்பதற்கு நேற்றிரவு (ஜூலை.18) ஆறு பேர் அந்தியூர் வந்தனர். அவர்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள ராஜமாணிக்கம் எலெக்ட்ரிக்கல் கடை முன் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது மழை பெய்து கொண்டிருந்தால் பழமையான கடையின் சுவர் இடிந்து, தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் சிக்கி சித்தன், மாதேவன், சின்ன பையன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், இடிபாடுகளினிடையே சிக்கிய ராஜேஷ், சிவமூர்த்தி, மகேந்திரன் ஆகியோரை அங்கிருந்தவர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அந்தியூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:நகை திருட்டு வழக்கில் 3 இளைஞர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details