தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எலக்ட்ரிக் பைக் வடிவமைப்பு போட்டி - தமிழ்நாட்டிற்கு மூன்றாமிடம்!

ஈரோடு: தேசிய அளவிலான எலக்ட்ரிக் பைக் வடிவமைப்பு போட்டியில் குஜராத் கல்லூரி முதலிடமும், தமிழ்நாடு கல்லூரி மூன்றாவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது.

electric-bike-design

By

Published : Sep 30, 2019, 10:52 PM IST

தேசிய அளவிலான எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் வடிவமைப்பு போட்டி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒரிசா உள்ளிட்ட ஏராளமான மாநிலங்களிலிருந்து 67 கல்லூரியின் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிக்கும் 540 மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியில் எலக்ட்ரிக் உதிரிபாகங்களை பயன்படுத்தி இருசக்கர வாகனம் வடிவமைத்து இயக்கும் ஆய்வுப் போட்டியை நடுவர்கள் நடத்தினர். இதில் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் எலக்ட்ரிக் பைக் இயக்கலாம் எனவும்; இந்தியாவிலேயே இருசக்கர வாகனத்தின் எலக்ட்ரிக் பைக்கை தயாரித்தால் விலை குறையும் எனவும் தயாரித்த மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் வடிவமைத்த எலக்ட்ரிக் பைக்கின் தரம் குறித்து ஒன்பது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

தேசிய அளவிலான எலக்ட்ரிக் பைக் வடிவமைப்பு போட்டி

இப்போட்டியில் குஜராத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி முதல் பரிசையும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி இரண்டாம் பரிசையும், திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பிடித்து அசத்தியது .

மேலும் இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனைக்கு வந்தால் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் குறைந்த விலையில் தயாரிக்க முயன்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஐஐடியுடன் கைகோர்க்கும் ஓயோ நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details