தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (ஏப்ரல் 6) தேர்தல் நடைபெற உள்ளதால் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைய அலுவலர்கள் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 374 வாக்குச்சாவடிகள் 29 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
29 மண்டல அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தனியார் வாடகை கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது வாடகை வாகனங்களில் பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதி மண்டலம் எண் வாரியாக வரிசையாக ஸ்டிக்கர் ஒட்டும் பணி இன்று சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றுவருகிறது.