தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு வாக்குச்சாவடிகளில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்! - erode election voting

ஈரோடு: பவானிசாகர் சட்டப்பேரவை தொகுதியில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

sathy_election_voting
sathy_election_voting

By

Published : Apr 5, 2021, 6:18 PM IST

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டபேரவை தொகுதியில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக மொத்தம் 374 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவுக்கு தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெயில் அதிகமாக இருப்பதால் வாக்காளர்கள் பாதுகாப்பாக காத்திருந்து வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடிகளுக்கு முன் பந்தல் அமைத்து இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக வாக்குச்சாவடி முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தபட்டுள்ளது. வாக்காளர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நின்று வாக்களிக்க வசதியாக சுண்ணாம்பு மூலம் வெள்ளை நிறத்தில் வட்டங்கள் போடப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்

மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பவானிசாகர் சட்டப்பேரவைதொகுதி முழுவதும் அனைத்து பகுதிகளிலும் துணை ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் உள்ளூர் காவல்துறையினர் ரோந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details