வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம்; கடைகளில் அதிகாரிகள் சோதனை! - election inspection
ஈரோடு: தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பொதுமக்களிடன் விசாரணை மேற்கொண்டனர்.
மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சியினர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் இருக்க தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோட்டை அடுத்த ஆர்.என் புதூர் பகுதியில் உள்ள கடைகளில் வைத்து வாக்காளருக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதன்பேரில், அங்கு விரைந்த வந்த பறக்கும் படை அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள தேநீர் கடை, சைக்கிள் கடை, மளிகை கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வாக்காளர்களுக்கு ஏதேனும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டால் அவற்றை உரிய முறையில் தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.