தமிழ்நாடு

tamil nadu

தேர்தல் புறக்கணிப்பு -  ஃபிளக்ஸ் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

ஈரோடு : அய்யம்பாளையம் கிராமத்தில் வாக்காளர்கள் அனைவரையும் ஒன்றாவது வார்டில் சேர்க்க வேண்டும் எனக்கூறி ஃபிளக்ஸ் வைத்து போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

By

Published : Dec 13, 2019, 11:57 PM IST

Published : Dec 13, 2019, 11:57 PM IST

ETV Bharat / state

தேர்தல் புறக்கணிப்பு -  ஃபிளக்ஸ் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

athy_election_boycott
athy_election_boycott

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகே அய்யம்பாளையம் கிராமத்தில் ஒன்றாவது வார்டில் இருந்த 362 வாக்காளர்களில், 192 வாக்காளர்களை நான்காவது வார்டுக்கு, வார்டு வரைமுறையின் அடிப்படையில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் செய்துள்ளனர். அதனால், ஒன்றாவது வார்டில் உள்ள வாக்காளர்கள் அருகில் உள்ள வாக்குப்பதிவு மையத்தை விட்டு, நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென்காட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டியுள்ளது.

அந்த வாக்குச்சாவடிக்கு சென்று வர போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை எனவும், வயதானவர்கள் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்துகின்றனர், கிராம மக்கள். மேலும் ஒரு குடும்பத்தில் உள்ள நான்குபேரில் இரண்டு பேருக்கு ஒன்றாவது வார்டில் வாக்களிக்கும் உரிமையும், இரண்டு பேருக்கு நான்காவது வார்டில் வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட மக்கள்

இதனால் வார்டு வரை முறையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரே வீதிக்கு இரண்டு உள்ளாட்சி உறுப்பினர்கள் இருந்தால் அடிப்படை வசதிகளை யாரிடம் கேட்டுப்பெறுவது என்று மக்கள் வேதனை தெரிவித்தனர்.

எனவே, அய்யம்பாளையம் கலைவாணர் வீதியில் உள்ள வாக்காளர்கள் அனைவரையும் ஒன்றாவது வார்டில் சேர்க்கவேண்டும் எனக்கூறியும், அதுவரை தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாகவும், அரசியல் கட்சியினர் யாரும் வாக்கு சேகரிக்க உள்ளே வரக்கூடாது என்றும் அறிவிப்பு செய்து ஃபிளக்ஸ் வைத்து இக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:

இளம்பெண் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details