தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் - பூத் ஸ்லிப் வழங்கும் பணிகள் தொடக்கம் - ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பூத் ஸ்லிப் எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்குவதற்கான பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று தொடங்கியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 19, 2023, 5:26 PM IST

பூத் ஸ்லிப் வழங்கும் பணிகள் தொடக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், வாக்களிக்க வருபவர்களுக்கு பூத் சிலிப் வீடு வீடாக சென்று இன்று (பிப். 19) முதல் வழங்கப்பட்டுவருகிறது.

வாக்காளர் தகவல் சீட்டில், வாக்காளர்களின் புகைப்படம் இடம் பெறாது. இதில் வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்காளர் பெயர், இடம் பெற்றுள்ள பாகத்தின் பெயர், பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடியின்
பெயர், தேர்தல் நாள் மற்றும் வாக்குப்பதிவு நேரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்த வாக்காளர் தகவல் சீட்டை மட்டும் வைத்து வாக்குச்சாவடியில் வாக்களித்திட இயலாது. எனவே, வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்திட வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாத சூழலில் இந்திய தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை கொண்டு வந்து வாக்களிக்கலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பறை இசைத்து வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

ABOUT THE AUTHOR

...view details