தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதவித்தொகை வழங்கக்கோரி முதியோர்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு: உதவித்தொகை வழங்கக்கோரி சத்தியமங்கலம் தாலுக்கா அலுவலகத்தில் முதியோர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முதியோர்கள் காத்திருப்பு போராட்டம்

By

Published : Jul 9, 2019, 1:24 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகாவிற்குட்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, கடம்பூர் பகுதிகளைச் சேர்ந்த முதியோர்கள், உதவித்தொகை கேட்டு கடந்த ஆண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். இதில் 213 பேர் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் ஓராண்டாகியும் இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை

உதவித்தொகை வழங்கக்கோரி முதியோர்கள் காத்திருப்பு போராட்டம்
இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் பலமுறை புகாரளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர். இந்நிலையில், உதவி தொகை வழங்கக்கோரி 300 க்கும் மேற்பட்ட முதியோர்கள் சத்தியமங்கலம் தாலுக்கா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடம் சென்ற சத்தியமங்கலம் வருவாய்த்துறை அலுவலர்கள், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரசு நிதி ஒதுக்கப்படாததால் உதவித்தொகை வழங்க இயலவில்லை எனவே உயர்திகாரிகளிடம் பேசி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details