ஈரோடுமாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குதிரைக்கல்மேடு பகுதியைச்சேர்ந்தவர்கள் மாதையன்-தங்கமணி தம்பதியினர். இவர்களின் மூத்த மகன் திவாகர்(13). இவர் பூதப்பாடி பகுதியில் செயல்படும், அரசு உதவி பெறும் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று(நவ.14) காலை வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பிய மாணவன் பள்ளி வாகனத்தில் ஏறி உள்ளார். பள்ளி வாகனமானது அம்மாபேட்டை அடுத்த கோனேரிப்பட்டி பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பள்ளி வாகனத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார்.