ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பங்களாப்புதூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பெருமுகை பகுதியை சேர்ந்தவர் சித்தியான். இவருக்கு பம்பாவாசன், சுபிகன் என இரு மகன்கள் உள்ளனர்.
பள்ளி விடுமுறை என்பதால், சிறுவர்கள் இருவரும் வீட்டின் முன்பு விளையாடியுள்ளனர். அப்போது பம்பாவாசன் தன்னை ஏதோ கடித்துவிட்டதாக தனது தந்தையிடம் கூறியுள்ளான். இதனால் அச்சத்திற்குள்ளான சித்தியன், சிறுவனை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.