ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதிக்குட்பட்ட முருகன்புதூர், மொடச்சூர், வெள்ளாளபாளையம், வெள்ளாங்கோயில் உட்பட 9 அரசு பள்ளிகளில் பயிலும் 774 மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், முதலமைச்சர், துணை முதலமைச்சரால் அதிநவீன ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் மூன்று நாட்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாசாவுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவிக்கு உதவிக் கரம் நீட்டுமா அரசு!
அதில் 9, 10ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்களின் திறம் மேம்பாடு குறித்து அறிந்துகொள்ளவும் இப்பயிற்சி நடைபெற்றுவருகிறது. இந்தாண்டு தேர்வு மையங்கள் 52 கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. மலைகிராமங்களிலும் தேவையான இடங்களிலும் தேர்வு மையங்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்கள் சரியாக பள்ளிக்கு வருகிறார்களா என்பது குறித்தும், மாணவர்களின் கல்வித்தரம் குறித்தும் பெற்றோர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்திவருகிறது. 8, 9ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு டேப் வழங்குவது குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் பேட்டி அதனால் மாணவர்களின் டேப்களை வகுப்பறையிலேயே வைத்துக்கொள்ளவும், அதற்கான பாதுகாப்பிற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2020 பிப்ரவரி மாதம் இறுதிக்குள் நான்கு மாணவர்களுக்கு ஒரு டேப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாசா செல்ல தகுதிப் பெற்றுள்ள அருப்புக்கோட்டை மாணவி லட்சுமி ப்ரியாவிற்கு தனியார் நிறுவனத்திடம் இருந்து நிதி திரட்டி அந்த மாவட்ட ஆட்சியர் மூலமாக வழங்க நடவடிக்கை பரிந்துரை செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இவ்விழாக்களில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உட்பட பலர் கலந்துகொண்டனர்.