தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சி தேர்தல் பணிகளில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் - செங்கோட்டையன் - உள்ளாட்சி தேர்தல் பணிகள்

ஈரோடு: கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்தார்.

minister sengottaiyan about local body election

By

Published : Sep 27, 2019, 8:14 PM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில அரசு முன்னேற்பாடுகள் செய்துவருகிறது. அதனடிப்படையில் முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். முதல் நடவடிக்கையாக வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. முதல்முறையாக வாக்காளர்கள் தங்களது பெயர், முகவரி, வாக்குச் சாவடி மையம் உள்ளிட்டவற்றை திருத்தம் செய்துகொள்ளும் பணி கைபேசி செயலிமூலம் நடைபெறுகிறது.

அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில் நகராட்சி வளர்ச்சிப் பணிகள், உள்ளாட்சி தேர்தல், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், நகராட்சியின் வளர்ச்சிப் பணிக்காக தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் குறித்தும், செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் விரிவாக பேசினார்.

செங்கோட்டையனின் பேட்டி

அதில் கீரிப்பள்ளம் ஓடை தூர் வாருதல், 24 மணிநேரமும் தடையில்லா குடிநீர் திட்டம், குழந்தைகளுக்கென தனி சிறுவர் நூலகம், புறவழிச்சாலை திட்டம் உள்ளிட்டவை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடப்பான ஆலோசனைகளும் அலுவலர்களுக்கு வழங்கினார்.

அதில், உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், அதில் குளறுபடிகள் இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் செங்கோட்டையன் வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் ஜெயராமன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்தம் செய்வது எவ்வாறு சுலபமான வழிமுறைகள் உள்ளது என்பதை எடுத்துரைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி மாவட்டந்தோறும் பிரிந்து கிடக்கும் வாக்காளர்களை ஒன்று சேர்ப்பது, புகைப்படங்களை மாற்றுவது, குடும்ப உறுப்பினர்களை ஒன்றிணைப்பது போன்றவைகளில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். அதனடிப்படையில் இன்று கோட்டாட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அனைத்து கட்சியினர் கூட்டம் விரைவில் கூட்டப்படும். அக்கூட்டத்தில் மக்கள் பணியாற்றும் அனைவரும் அழைக்கப்படுவார்கள் அவர்களின் ஆலோசனைகளும் கேட்கப்படும். கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "சின்னம் இப்படி தான் வாங்கணும்"- அறிவுறுத்திய மாநிலத்தேர்தல் ஆணையம்!

ABOUT THE AUTHOR

...view details