தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்களுடன் கைகோர்க்கும் திமுக' - எடப்பாடி பழனிசாமி - ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்களுடன் கைகோர்க்கும் திமுக

ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்கள் திமுகவுடன் கைகோர்த்து இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Etv Bharat எடப்பாடி பழனிசாமி
Etv Bharat எடப்பாடி பழனிசாமி

By

Published : Aug 8, 2022, 7:56 PM IST

Updated : Aug 8, 2022, 9:13 PM IST

ஈரோடு:அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று (ஆக. 08) திருப்பூர் மாவட்டம், காங்கேயம் உள்ளிட்டப்பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சென்னிமலை வழியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வந்தார். பெருந்துறை பழைய பேருந்து நிலையம் முன்பு எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பண்ணன், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொடுத்து வந்ததாகவும் தற்போது விடியா திமுக அரசு மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஏமாற்றி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை அதிமுக அரசு சட்டப்பேரவையில் சட்டத்தை இயற்றி தடை செய்ததாகவும், சரியான ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றத்தில் அவர்கள் வெற்றிபெற்றுவிட்டதாகவும்; சரியான ஆதாரத்தை திமுக அரசு அளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆன்லைன் சூதாட்ட ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்கள் திமுகவுடன் கைகோர்த்துள்ளதாகவும், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு 20ஆயிரம் கோடி ரூபாய் பணம் வருவதாகவும் தெரிவித்தார்.

'ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்களுடன் கைகோர்க்கும் திமுக' - எடப்பாடி பழனிசாமி

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய திமுக அரசு கருத்துகேட்கும் கூட்டம் நடத்துவதாக கூறியிருப்பது வேடிக்கையாக இருப்பதாக கூறினார். மேலும், அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் அருந்ததிய மக்கள் கல்வி உள்ளிட்ட அனைத்திலும் மேம்பட தனிக்கவனம் செலுத்தப்படும் எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க:Video: ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த ரஜினிகாந்த்!

Last Updated : Aug 8, 2022, 9:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details