ஈரோடு: அந்தியூர் அருகே உள்ள அத்தாணி, கருவல்வாடிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (64). ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு மூன்றாவது வார்டு கவுன்சிலராகவும், ஈரோடு மாவட்ட கூட்டுறவு நுகர்வோர் பண்டகசாலையின் துணைத் தலைவராகவும் இருந்தார். இவர் நேற்று முன்தினம் அதிகாலை மாரடைப்புக்கு காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, சண்முகவேல் இல்லத்திற்கு நேரில் சென்று சண்முகவேலில் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆளுதல் தெரிவித்தார்.