தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”மத்திய அரசின் பாதத்தில் பூனையாக ஆட்சியை ஒப்படைத்துவிட்டார் எடப்பாடி” - ஸ்டாலின்

ஈரோடு : 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில்கொண்டு நடைபெற்ற திமுக சிறப்பு பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டு பேசினார்.

திமுகவின் சிறப்பு பொதுக் கூட்டம்
திமுகவின் சிறப்பு பொதுக் கூட்டம்

By

Published : Nov 1, 2020, 11:42 PM IST

வரும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் ’தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில், ஈரோடு பிளாட்டினம் மஹாலில் சிறப்பு பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. சுமார் ஐம்பதாயிரம் பேர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசிய விவரங்கள் பின்வருமாறு:

”நான் திறந்த முதல் கலைஞர் சிலை ஈரோட்டில்தான். கலைஞரின் கட்டளையைக் காப்போம். மீண்டும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மலரும் என சூளுரை ஏற்போம். தமிழ்நாட்டில் நடைபெற்று வருவது ஆட்சி அல்ல, காட்சி. அதிமுகவின் கட்சிக்குத் தலைவரும் இல்லை, பொதுச்செயலாளரும் இல்லை. கொள்ளையடிப்பது மட்டும்தான் அதிமுக ஆட்சியின் கொள்கை.

அதிமுக ஆட்சியை மத்திய பாஜக அரசு மட்டும்தான் பாராட்டும். மக்கள் விரோத ஆட்சியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள், நெசவாளர்கள், தொழில்துறை சார்ந்தவர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் பாதிக்கப்படுள்ளனர். ஆட்சியாளர்கள் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

திமுக சிறப்பு பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகப் பேசிய ஸ்டாலின்
தற்போதுள்ள அதிமுக, மத்திய அரசைப் பார்த்து அஞ்சுகிறது. மத்திய அரசு செயல்படுத்துகிற மக்கள் விரோதத் திட்டங்களுக்கு மாநிலத்தில் உள்ள அதிமுக அரசு அதரவளிக்கிறது. பாஜக அரசின் பாதத்தில் ஒரு பூனை போல ஆட்சியை ஒப்படைத்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுய ஆட்சி என்ற நிலையைக் கொண்டுவர வேண்டும். தமிழ்நாட்டை மீட்போம்” என்றார்.
முன்னதாக தெற்கு மாவட்டச் செயலர் சு.முத்துச்சாமி, வடக்கு மாவட்டச் செயலர் என்.நல்லசிவம் ஆகியோர் இணைந்து 135 பேருக்கு பொற்கிழிகளை வழங்கினர்.
இந்த சிறப்புப் பொதுக்கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி, ஜெகதீசன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராசு, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details