ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமையான இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வந்தார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் கோயிலுக்கு வருவதைக் கண்ட அப்பகுதியில் இருந்த பக்தர்கள் அவரைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.
பண்ணாரி அம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்! - பண்ணாரி அம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்
பண்ணாரி அம்மன் கோயிலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
Etv Bharat
இதைத் தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் பண்ணாரி அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கு மாலை அணிவித்துப் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோயில் பணியாளர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதையும் படிங்க:அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை!