ஈரோடு: ஈரோடு மாவட்டம்மரப்பாலம் நான்கு முனை பகுதியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில், 75ஆவது சுதந்திரதின விழா மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஆக. 13) நடைபெற்றது. இதில், பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, செய்தியாளரிடம் பேசிய அவர், “மதுரையில் நிதியமைச்சர் வாகனம் மீது பாஜகவினர் காலணி வீசிய விவகாரத்தில், பாஜகவின் அர்த்தம் என்னவென்று அவர்கள் வீசிய பொருளில் இருந்தே தெரிகிறது.
தமிழ்நாட்டில் இன்னும் மின் கட்டணம் அதிகப்படுத்தப்படவில்லை. அதிகப்படுத்தப்படும் என சொல்லியிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி அரசுதான். தமிழ்நாடு அரசை மின்சார கட்டணம் உயர்த்த வேண்டும் என மத்திய அரசு கடந்த ஓராண்டாக வற்புறுத்தி வருகிறது. ஆனால், அவர்கள் எவ்வளவு உயர்த்துகிறார்கள் என்பது தெரியவில்லை. மக்களை பாதிக்காத வகையில் உயர்வு இருக்கும் என்று நினைக்கிறேன்.