கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டியில் மக்கள் பலர் வழக்கம்போல் வாகனங்கள் இயக்கிவருவதாகவும், அதிலும் முகக்கவசங்கள் இன்றி வெளியில் சுற்றித் திரிவதாகவும் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த காவல் துறையினர் அங்கேயே முகாமிட்டு அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.