ஈரோடு: பவானி கூடுதுறை பகுதியில் பழமையான காளிங்கராயன் அணைக்கட்டு உள்ளது. கன மழை காரணமாக கொடிவேரி அணைக்கட்டில் இருந்து 1,590 கன அடி தண்ணீரும், குண்டேரிப்பள்ளம் அணை, அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை தண்ணீர், அந்தியூர் பெரிய ஏரி வழியாக ஆப்பக்கூடல் ஏரிக்கு வந்து, இறுதியாக பவானி ஆற்றில் வெளியேறும் தண்ணீரால் தற்போது காளிங்கராயன் அணை கட்டிற்கு 7,757 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
மேலும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடி உபரி நீரால் காவிரியில் இருகரைகளையும் தொட்ட படி வெள்ளம் ஆர்பரித்து செல்கிறது. இதனால் பவானி நகரில் காவிரி கரையோரத்தில் கந்தன்பட்டறை, பசுவேஸ்வரர் வீதி, செம்படவர் வீதி உள்ளிட்ட இடங்களில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.