தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடை மழை: ஆசனூர் ஓடைகளில் கரைபுண்டு ஓடும் வெள்ளம் - ஆசனூர்

ஈரோடு: கோடை மழை காரணமாக ஆசனூர் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது.

water
water

By

Published : May 8, 2020, 7:39 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர், திம்பம் மலைப்பகுதியில் வறட்சி காரணமாக யானைகள், மான்கள் வனத்தை விட்டு வெளியேறுகின்றன.

இந்நிலையில் இரு தினங்களாக ஆசனூர் பகுதியில் கோடை மழை பெய்தது. இதன் காரணமாக ஆசனூர், கோட்டாடை, தலமலை, அரேப்பாளையம் வனத்தில் உள்ள ஓடைகளில் நீர் வழிந்தோடியது.

தொடர்ந்து பெய்த மழையால் பல்வேறு ஓடைகளில் வரும் வெள்ளநீர் ஒன்றாக கலந்து அரேப்பாளையம் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து ஓடியது.

ஆசனூர் ஓடைகளில் கரைபுண்டு ஓடும் வெள்ளம்

கடந்த சில வாரங்களாக கடும் வெயிலில் வறட்சியாக காணப்பட்ட ஆசனூர் வனப்பகுதியில தற்போது பெய்த மழையால் மரங்களில் இலைகள் துளிர்விடுகின்றன.

வனஓடைகளில் ஓடும் மழைநீரை யானைகள் மான்கள் போன்ற விலங்குகள் குடித்து தாகம் தீர்க்கின்றன. இதனால் யானைகள் குடிநீர் தேடி சாலையை கடப்பது குறையும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details