ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வசித்துவருபவர் ரவி(48). இவர் சொந்தமாக மினிலாரி வைத்து வாடகைக்கு ஓட்டிவருகிறார். இவர் வழக்கம்போல் தனது வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார். சிறிது நேரத்துக்குப் பிறகு ரவி வெளியே வந்து பார்தத்போது, தனது வாகனம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையினரிடம் ரவி புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், தீவிரமாக வாகனத்தை தேடிவந்தனர்.
இந்நிலையில், புஞ்சைபுளியம்பட்டியைச் சேர்ந்த ஒருவர், ரவியின் வாகனம் கோவை இடுகம்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருப்பதாக அவருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.