ஈரோடு: சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை, செண்டு மல்லி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுகின்றன. விவசாயிகள் தங்கள் தோட்டதில் விளையும் பூக்களை சாகுபடி செய்து தினந்தோறும் சத்தியமங்கலம் மலர் சாகுபடி சந்தையில் ஏல முறையில் விற்று வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பூக்கள் உற்பத்தி தினந்தோறும் 2 டன்னாக இருந்த நிலையில், தற்போது நிலவிவரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி அரை டன்னாக சரிந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மல்லிகை விற்பனை அதிகரித்துள்ளதால், பூக்களை ஏலம் எடுப்பதில் விவசாயிகளிடையே கடும் போட்டி நிலவியது.