ஈரோடு மாவட்டம் ஆசனூர் மலைப்பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. தொடர் மழை காரணமாக வனப்பகுதியில் உள்ள ஓடைகளில் நீர் நிரம்பியதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், ஆசனூரில் இருந்து அரேப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் வழியே செல்லக் கூடிய போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் ஓடியதால் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன.
ஆசனூர் மலைப்பகுதியில் பலத்த மழை -போக்குவரத்து பாதிப்பு - aasanur hills area
ஈரோடு: ஆசனூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த மழை
இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.