தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடிப்பெருக்கு: கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோடு மாவட்டம், கொடிவேரி தடுப்பணையில் குவிந்த மக்களால், பாதுகாப்புக் கருதி காவல் துறை, தீயணைப்புத் துறை என நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

By

Published : Aug 3, 2023, 9:52 PM IST

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஈரோடு: கொடிவேரி அணை ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று. இந்த அணைக்கு பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், தடுப்பணையைக் கடந்து அருவி போல கொட்டும்.

இந்த தடுப்பணையில் அருவிபோல கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வதற்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.

மேலும் முக்கிய தினங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும். இந்த நிலையில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்தனர். காலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக அதிகளவில் மக்கள் வரத் தொடங்கினர்.

பொதுமக்கள் கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் உற்சாகமாக குளியளிட்டும் மகிழந்தனர்.மேலும் அணையில் பிடிக்கபட்ட பொறித்த மீன்களை சுற்றுலா பயனிகள் வாங்கி உண்டும் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ந்தனர்.

ஆடிப் பெருக்கை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் அணையின் இரு புறங்களில் கடத்தூர் மற்றும் பங்களாபுதூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர், பொதுப்பணி துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். குறிப்பாக ஆபத்தான இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என காவல்துறை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

இதையும் படிங்க:தொப்பூர் - பவானி இருவழி சாலையில் சுங்கச்சாவடி அமைக்கக் கூடாது - தருமபுரி எம்.பி. வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details