தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அரசு பேருந்தில் ஆண்களையும் இலவசமாக ஏற்றி செல்லுங்கள்' - மதுப்பிரியர் ரகளை - etv bharat

அரசுப் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டது போல், ஆண்களையும் அனுமதிக்க கோரி நடுரோட்டில் மதுப்பிரியர் ரகளையில் ஈடுபட்டார்.

நடுரோட்டில் மதுப்பிரியர் உருண்டு பிரண்டு ரகளை
நடுரோட்டில் மதுப்பிரியர் உருண்டு பிரண்டு ரகளை

By

Published : Aug 11, 2021, 7:38 PM IST

Updated : Aug 11, 2021, 9:57 PM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து சத்தி செல்ல அரசு பேருந்து புறப்பட்டது.

பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும் போது மதுப்பிரியர் அந்த பேருந்தின் முன்பு படுத்துக் கொண்டார்.இதனைக் கண்ட நடத்துனர் மதுப்பிரியரிடம் பேருந்திற்கு வழிவிடுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு மதுப்பிரியர், "அரசுப் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டது போல் ஆண்களையும் அனுமதிக்க வேண்டும். கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து நஞ்சகவுண்டன் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நடந்து செல்ல முடியவில்லை. அரசுக்கு வருமானம் தரும் எங்களை பேருந்துகளில் இலவசமாக ஏற்றி செல்ல வேண்டும்" என்றார்.

மதுப்பிரியர் ரகளை

உடனே அங்கு வந்த போக்குவரத்து உயர் அலுவலர்கள் மதுப்பிரியரிடம் சமாதானம் பேசி அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க:தூத்துக்குடியில் எஸ்.பி.வேலுமணி - சிறப்பு தரிசனமா...ரகசிய சந்திப்பா?

Last Updated : Aug 11, 2021, 9:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details