தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் குழாய் வெடித்து சாலையில் விரயமான தண்ணீர்! - Erode district news

ஈரோடு: மக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய்கள் வெடித்ததில் பல லிட்டர் குடிநீர் விரயமானது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குடிநீர்
குடிநீர்

By

Published : Jul 26, 2020, 4:34 PM IST

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு பவானி ஊராட்சிக்கோட்டை காவிரி ஆற்றுப் பகுதியிலிருந்து மாநகராட்சிக்குக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை அறிவித்தது.

இந்நிலையில் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் முடிவுற்று அடுத்த மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படவுள்ள நிலையில், புதியதாக அமைக்கப்பட்ட குழாய்கள் தண்ணீர் திறந்துவிடப்பட்டு கடந்த சில நாள்களாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி இன்று காலை பவானி பிரதான சாலைப் பகுதியிலுள்ள வாட்டர் டேங்க் சாலைப் பகுதியில் அமைக்கப்பட்ட குழாயில் தண்ணீர் வேகத்தின் அழுத்தம் அதிகமாக வந்துள்ளது.

இதையடுத்து அழுத்தம் தாங்க முடியாமல் குழாய்கள் வெடித்தன. இதன் காரணமாகப் பவானியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் ஆறாக ஓடியது.

யாருக்கும் பயன்படாமல் தண்ணீர் விரயமாக கழிவுநீர் கால்வாயில் கலப்பது குறித்தும் தொடர்ந்து 30 நிமிடங்களாகத் தண்ணீர் விரயமாவது குறித்தும் கூட்டுக்குடிநீர்த் திட்ட அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த கூட்டுக்குடிநீர்த் திட்டப் பணியாளர்கள் வெடித்த குழாய்களை அடைத்து தண்ணீர் விரயத்தைத் தடுத்தி நிறுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details