ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் 10 முதல் 27ஆவது வளைவு வரை லங்கூர் இன குரங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
உணவு வழங்க வேண்டாம்: விழிப்புணர்வு பலகை வைத்தும் பலனில்லை! - திம்பம் மலைப்பகுதி
ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் லங்கூர் இனக்குரங்குகளுக்கு தின்பண்டங்களை கொடுக்க வேண்டாம் என்று வனத் துறையினர் அறிவித்தும் எவ்வித பலனும் இல்லை, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், மனிதர்களைக் கண்டாலே தாவி ஓடும் லங்கூர் இன குரங்குகள், வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி தின்பண்டங்கள் வழங்கும்போது கார் உள்ளிட்ட வாகனங்களின் கதவு வழியாக உள்ளே நுழைய முயற்சிக்கின்றன.
வனத் துறையினரும் குரங்களுக்கு உணவு, தின்பண்டங்களை வழங்கக் கூடாது என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்துவதோடு, பல இடங்களில் விழிப்புணர்வு பலகைகள் வைத்தும் பலனில்லை. இது குறித்து வனத் துறை அலுவலரிடம் கேட்டபோது, திம்பம் மலைப்பாதையில் குரங்குகளுக்கு தின்பண்டங்கள் வழங்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.