கரோனா வைரஸ் பெருந்தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் அம்மாவட்ட மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி, வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்கள் கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும். வீடுகளில் கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு முத்திரை அளிக்கப்படும்.
அவர்கள் வெளியே வந்தால் பொதுமக்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். பேருந்தில் பயணம் மேற்கொள்பவர்கள் கைகளைக் கட்டாயம் கழுவ வேண்டும். அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட உள்ளது. முகக்கவசங்கள் தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
பொதுமக்கள் கூடும் இடங்களில் 1 மீட்டர் இடைவெளிக்கான கோடுகள் வரையப்படும். காய்கறிச் சந்தைகளில் மக்கள் இடைவெளிவிட்டு கடைப்பிடிக்க வேண்டும். கரோனா வைரஸ் பெருந்தொற்றிற்கு சிகிச்சை பெறுபவர்களில் யாரும் உயிரிழக்கவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். தனியார் தொலைக்காட்சி சேனலின் பெயரைப் பயன்படுத்தி, தவறான தகவலை பரப்பிய 2 பேர் கோபிசெட்டிபாளையத்தில் கைது செய்யப்பட்டுளனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.