ஈரோடு:பெரம்பலூர் மாவட்டத்தைச்சேர்ந்த சில குடும்பத்தினர் பாரம்பரியமாக நாடோடியாக சென்று கழுதைப்பால் விற்று வருகின்றனர். இதற்கான கழுதைகளை வளர்த்து கோடைக்காலங்களில் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் பயணித்து கழுதைப்பாலை கறந்து விற்று வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா காரணமாக கழுதைகள் வெளியே அழைத்துச் செல்லமுடியாத நிலையில், தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வந்த சில குடும்பத்தினர் சத்தியமங்கலம் பகுதியில் கழுதைப் பால் கறந்து விற்று வருகின்றனர்.
10 லிட்டர் வரை பால் கறக்கும் கழுதைகளை வைத்துள்ள இவர்கள், இரண்டு கழுதைகளுடன் ஒருவர் என சத்தியமங்கலம் நகர வீதிகளில் சென்று கழுதைப்பால் எனக் கூவி கூவி விற்றுவருகின்றனர். கழுதைப் பாலை விரும்பி சாப்பிடுபவர்கள் அங்கேயே பாலைக் கறந்து 50 மில்லி ரூ.200க்கும் விற்கின்றனர்.