தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்தியமங்கலம் புலிகள் காப்பக விலங்குகள் குறித்த ஆவணப்படம் வெளியீடு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் காடு, விலங்குகள் குறித்த அழகிய ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக விலங்குகள் குறித்த ஆவணப்படம் வெளியீடு
சத்தியமங்கலம் புலிகள் காப்பக விலங்குகள் குறித்த ஆவணப்படம் வெளியீடு

By

Published : Jul 20, 2022, 7:10 PM IST

ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது 1,455 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இந்த மலைப்பகுதியில் இயற்கை சூழலோடு வாழும் விலங்குகள் குறித்த ஆணவப்படம் இன்று வெளியிடப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் களை இயக்குநர் ராம சுப்பிரமணியம் ஆவணப்படத்தை வெளியிட்டார்.

அதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இயற்கை சூழல், அங்கு வாழும் சிறுத்தை, புலி, காட்டெருமை, மான் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் படம் பிடிக்கப்பட்டு ஆவணப் படமாக்கப்பட்டுள்ளது.

ஆவணப்படம் வெளியீடு

இந்த படத்தில் வேட்டைத் தடுப்பு காவலர் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதும் காண்பிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறு ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் அதிக நிமிடங்கள் கொண்ட ஆவணப்படம் வெளியிடப்படும் என கள இயக்குநர் ராம சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதையும் படிங்க:காவிரி ஆற்றில் ஆபத்தை உணராமல் 'டைவ்' அடிக்கும் இளைஞர்கள்

ABOUT THE AUTHOR

...view details