தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக எம்எல்ஏ மீது ரூ.100 கோடி சொத்துக்குவிப்பு வழக்குத் தொடரவுள்ள திமுக! - embezzlement case

ஈரோடு: அந்தியூர் அதிமுக எம்எல்ஏ மீது 100 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்குத் தொடரவுள்ளதாக ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் தெரிவித்துள்ளார்.

நல்லசிவம்
நல்லசிவம்

By

Published : Jan 9, 2021, 10:50 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைம் அருகே உள்ள கவுந்தபாடியில் திமுக கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம் அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, "வடக்கு மாவட்டம் திமுக சார்பில் 340 இடங்களில் 'அதிமுகவை நிராகரிப்போம்' என்ற மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.

திமுகவின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம்

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்த்துகிறது. அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் திமுகவிற்கு வாக்களிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா கிருஷ்ணன் மீது 100 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்களிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக விரைவில் திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளோம்" எனத் தெரிவித்தார்

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம்

ABOUT THE AUTHOR

...view details